முக்கியச் செய்திகள் விளையாட்டு

IPL 2021; முதலிடத்துக்கு முன்னேறுமா RCB?

இன்று நடைபெறும் போட்டியில் தவறவிட்ட முதலிடத்திற்கு மீண்டும் பெங்களூரு அணி முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு RCB ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் போட்டி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 22வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளன.

இரு அணிகளும் இதுவரை தலா 5 போட்டிகளில் விளையாடி தலா 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும் டெல்லி அணி +0.334 புள்ளிகளுடன் 2வது இடத்தையும், பெங்களூரு அணி +0.096 புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பெற்றுள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும் என்பதால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரமாக முயற்சியில் ஈடுபடுவார்கள்.

இரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் பெங்களூரு அணி 15 போட்டிகளிலும், டெல்லி அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Advertisement:

Related posts

முதல் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவுற்றது!

Ezhilarasan

ஒரு குடும்பத்திற்கான கட்சியாக காங்கிரஸ் கட்சி மாறிவிட்டது : நிர்மலா சீதாராமன்!

Karthick

எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு வாக்குப்பதிவு! வாக்குப்பதிவு நிறுத்தம்!!

Karthick