மதத்தை வைத்தோ சாதியை வைத்தோ திமுக ஒருபோதும் அரசியல் செய்வதில்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, சர்வாதிகாரியாக செயல்பட்டார் எனக் குற்றம் சாட்டினார்.
https://twitter.com/mkstalin/status/1491412941681623042
ஐந்து அனைத்துக் கட்சிக் கூட்டங்களை திமுக அரசு இதுவரை நடத்தியுள்ளதாகவும் இதை விட ஜனநாயம் வேறு எங்கு காண முடியும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில் அதிமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி வெற்று பேச்சுகளை பேசி வருவதாக விமர்சனம் செய்தார். மக்களை திசை திருப்பக் கூடிய பொய்களை சொல்லி வருவதாகவும் குற்றம் சாட்டிய அவர், மதத்தை வைத்தோ சாதியை வைத்தோ திமுக ஒருபோதும் அரசியல் செய்வதில்லை எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையின்போது தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








