முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுகவில் சேருகிறாரா குஷ்பு?

திமுகவில் நான் சேரப்போகிறேன் என்பது கீழ்த்தரமான செய்தி என நியூஸ் 7 தமிழுக்கு குஷ்பு தொலைப்பேசி வாயிலாக விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக பாஜகவில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. மாநில தலைவராக பொறுப்பு வகித்த எல்.முருகன், மத்திய இணையமைச்சராக விரிவாக்கப்பட்ட அமைச்சரவையில் பொறுப்பேற்றார். இதனையடுத்து புதிய மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார். இதனையடுத்து காங்கிரசிஸிலிருந்து பாஜகவுக்கு மாறிய குஷ்பு குறித்து சில விமர்சனங்கள் மேலெழுந்தது. இதையடுத்து நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய குஷ்பு, “மனசாட்சியை அடகு வைத்து விட்டு, கீழ்த்தரமான செய்தியை சிலர் பரப்புகின்றனர். எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி பாஜகவில் இணைந்தேன். பாஜகவில் சேர்ந்த உடன், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அண்ணாமலையை விட வேறு யாரும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பலமாக இருக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.

மேலும், “நான் கட்சியிலும், ஆட்சியிலும் பதவி எதையும் கேட்கவில்லை. வரவேண்டிய நேரத்தில் பதவி வரும்.” என்றும் கூறியுள்ளார். முன்னதாக டெல்லியில் பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரை குஷ்பு இன்று சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

காங்கிரஸ் வேட்பாளரின் மகள் தீவிர வாக்கு சேகரிப்பு!

Gayathri Venkatesan

பாமக இடம்பெறும் கூட்டணியில் தேமுதிக இடம்பெறாதா? பிரேமலதா பதில்!

Ezhilarasan

கொரோனா தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும்: பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்

Halley karthi