முக்கியச் செய்திகள் தமிழகம்

திமுக எம்.பி. ஆ.ராசாவின் ரூ.55 கோடி சொத்துக்கள் முடக்கம்

திமுக எம்பி ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான கோவையில் உள்ள 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. 

முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ராசா, கடந்த 1999 முதல் 2010ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 92 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதாவது வருமானத்திற்கு அதிகமாக 575% சதவிகிதம் சொத்து சேர்க்கப்பட்டதாக இந்த புகாரில் கூறப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ராசா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை, பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்திய சிபிஐ, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றியது.

தி.மு.க. எம்பி. ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இவர் 2004-2007 காலகட்டத்தில் மத்திய அமைச்சராக இருந்த போது ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று தர லஞ்சமாக பெற்ற பணத்தை பினாமி பெயரில் கோவையில் 45 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ. 55 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து சொத்துக்களை முடக்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாரிசு பட இயக்குனர் திருவண்ணாமலையில் சாமி தரிசனம்

Web Editor

கனடாவில் விக்டோரிய மகாராணியின் சிலை தகர்ப்பு

Halley Karthik

தெலங்கானாவில் இன்று முதல் முழு ஊரடங்கு: என்னென்ன கட்டுப்பாடுகள்?

Halley Karthik