பிரதமர் நரேந்திர மோடி 74வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் தமிழகத்தின் சிறப்புகளையும், தமிழ் மொழியின் பெருமையை குறித்தும் பேசியுள்ளார்.
மன் கீ பாத் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது..
“உலகின் ஒவ்வொரு சமூகத்திலும் நதியைப் பொருத்து பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் உள்ளது பல நாகரிகங்கள் நதிக்கரையில்தான் உருவாகின. நமது கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது என்பதால் நதிநீர் நமது வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாததாக உள்ளது.
பழம்பெரும் தமிழ் மொழியின் இலக்கிய வளம் மிகவும் அற்புதமானது. இந்த பெருமைமிகு தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கிணற்று நீரைப் புதுப்பிக்கும் பணிகளில் அந்த மாவட்ட மக்களே ஈடுபட்டிருக்கின்றனர். அதேபோல மதுரையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் வாழை நாரிலிருந்து பல பொருட்களை உருவாக்கி வருகிறார். நமது கனவுகளை நனவாக்க மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டியது என்பதில்லை நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும்.

ஹைதராபாத்தில் ஒரு விவசாயி தனது விவசாய நிலத்தில் இருக்கும் பிரச்சனைகளைத் தனது கண்டுபிடிப்புகள் மூலமாக மாற்றியுள்ளார்.
அதேபோல லடாக், குஜராத் உள்ளிட்ட பல பகுதிகளிலும் விவசாயிகள் தங்களது நிலத்தில் இருக்கும் பிரச்சனைகளை தங்களது எளிய கண்டுபிடிப்புகள் மூலம் சரி செய்து வருகின்றனர்.
அறிவியல் குறித்து நாம் அதிகம் படிக்க வேண்டும். அறிவியல் என்பது இயற்பியல், வேதியியல் மட்டுமல்ல. சுயச்சார்பை இந்தியாவை உருவாக்க பல விதமான அறிவியல் மற்றும் விஞ்ஞான விஷயங்கள் உள்ளன.
சுயச்சார்பு என்பது அரசாங்கத்தின் திட்டம் அல்ல இது ஒரு தேசிய செயலாக மாறியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில்களை நாமே தயாரித்து வருகிறோம். கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் நமது பங்களிப்பை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.”
என பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.







