ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் குரூப் பிரிவு ஆட்டத்தில் இந்தோனேஷியாவை 16-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
முதல் பாதி ஆட்டத்தில் 6-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது.
பிற்பாதி ஆட்டத்தில் 10 கோல்களைப் பதிவு செய்து இந்திய ஆடவர் அணி அசத்தியது.
23ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதே பிரிவில், பாகிஸ்தான், ஜப்பான், போட்டியை நடந்தும் இந்தோனேஷியா ஆகிய அணிகளும், பி பிரிவில் வங்கதேசம், மலேசியா, ஓமன், தென் கொரியா ஆகிய அணிகளும் உள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இதுவரை தென்கொரியாவே அதிக முறை (4 முறை) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தலா 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. கேப்டன் விரேந்திர லக்ரா தலைமையிலான இந்திய ஹாக்கி அணியின் இந்த வெற்றி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதிக கோல்களைப் பதிவு செய்த அணி என்ற அடிப்படையில் பாகிஸ்தானையும் பின்னுக்குத் தள்ளியது இந்தியா.
இந்த வெற்றியின் மூலம், ஏ பிரிவில் இருந்து இந்தியா-ஜப்பான் அணிகளும், பி பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகளும் சூப்பர் 4 எனப்படும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இந்திய அணியின் அபார வெற்றிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.