அடுத்த வாரம் அமலாக்கத்துறை வரப்போகிறது என்று மிரட்டுகிறார்கள். மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சி திமுக அல்ல திருமயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் 4.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஒரு கட்சியினுடைய கிளைக் கழகமாக அமலாக்கத் துறையை நினைத்து கொண்டு இருந்தால் அதை விட வெட்க கேடு இந்திய ஜனநாயகத்திற்கு கிடையாது. அடுத்த வாரம் அமலாக்கத்துறை வரப்போகிறது என்று மிரட்டுகிறார்கள்.
மிரட்டலுக்கு பயப்படுகிற கட்சி திமுக அல்ல என்றும், அடுத்த வாரம் இங்கே வருகிறார்கள் அமலாக்கத்துறை அங்கே வருகிறார்கள் என்று முன்னறிவிப்பு கொடுக்கிற பணியை ஒரு கட்சி செய்து கொண்டிருக்கிறது. அதைவிட ஜனநாயகத்திற்கு வேறு கேவலம் இல்லை அமலாக்கத்துறை தங்கள் கையில் இருக்கிறது என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் அதற்கு நன்றி எங்கள் மீது எந்த தவறும் கிடையாது.
நாங்கள் எதற்கும் பயப்படவில்லை நாங்கள் யார் யார் வீட்டில் எல்லாம் ரெய்டு நடத்தினோமோ அவர்களே இல்லங்களில் இன்று அமலாக்கத்துறை கோடிக்கணக்கான ரூபாயை கண்டுபிடித்து இருக்கிறார்கள். நாங்கள் செய்த ரெய்டை நியாயப்படுத்தும் வகையில் அவர்கள் வலிமைப்படுத்தி உள்ளார்கள் அதற்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் என்று பேசினார்.







