நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15ந்தேதி நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிவேகத்தில் இணையத்தள சேவை உள்ளிட்டவற்றை வழங்கும் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நாளை செல்போன் வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு வாரம் 40 சுற்றுக்களாக 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை மத்திய அரசு நடத்தியது. இதில் ஜியோ, ஏர்டெல், உள்ளிட்ட முன்னணி செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் பங்கேற்று 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் அதிக அளவில் 5ஜி அலைக்கற்றைகளை ஏலம் எடுத்தது. 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ், 26 ஜிகா ஹெர்ட்ஸ் போன்ற அலைவரிசைகளில் 5ஜி அலைக்கற்றையை ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் ஏலம் எடுத்தது. மொத்தம் 88,078 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றையை ஜியோ நிறுவனம் ஏலம் எடுத்தது. மற்ற நிறுவனங்களைவிட அதிக தொகைக்கு ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்தது.
இந்நிலையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதாமாக வரும் 15ந்தேதி நாடெங்கிலும் ஒரே நேரத்தில் 5ஜி அலைக்கற்றை சேவையை அறிமுகப்படுத்த ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.