லியோ படத்துக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதித்துள்ள தமிழ்நாடு அரசு
விஜயை பார்த்து திமுக பயப்படுகிறது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர்
கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி அருகே கொடி காத்த மாவீரன் திருப்பூர் குமரனின் 120வது
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாமை அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கொடி காத்த மாவீரன் திருப்பூர் குமரனின் 120வது பிறந்தநாள் விழாவை
முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் உள்ள
சமுதாய கூடத்தில் வைத்து தமிழ் செம்படை கழகம் மற்றும் தென்னகத்து செங்குந்தர்
பேரமைப்பு சார்பில் திருப்பூரின் குமரன் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திருப்பூர் குமரனின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கடம்பூர் ராஜு தெரிவித்ததாவது..

” விஜய்யை பார்த்து திராவிட முன்னேற்ற கழகம் பயப்படுகிறது. சினிமாவில் எந்த நடிகர்களாக இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகளை அரசு பார்க்க கூடாது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னணி நடிகர்களின் படம் வரும்போது எந்த பாரபட்சம் பார்க்காமல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தோம்.
ஆனால் தற்போது குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது
சரியல்ல கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திரைப்படங்கள் பாரபட்சமில்லாமல் திரையிடப்பட்டது. ஆனால் தற்போது 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படாத சூழ்நிலையில் தான் உள்ளது இதற்குக் காரணம். ரெட் ஜெயண்ட் என்ற தனி ஆதிக்கம் தான்.” என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.







