31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

8 வழி சாலைக்கு திமுக எதிரி கிடையாது- அமைச்சர் எ.வ.வேலு

சென்னை-சேலம் இடையேயான 8 வழி சாலை திட்டத்திற்கு திமுக எதிரி கிடையாது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னை – சேலம் 8 வழி சாலை திட்டம் குறித்து சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது 8 வழி சாலை அமைக்கும் விவகாரத்தில் பிரச்சனைகளை சரி செய்ய தான் சொன்னார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு திமுக எதிரி அல்ல. போக்குவரத்து அதிகரிக்கும் போது சாலைகளை விரிவு படுத்தி தான் ஆக வேண்டும். நிலங்களை எடுத்து தான் ஆக வேண்டும். 8 வழி சாலை திட்டம் வேண்டும் என எங்கும் நான் பேசவில்லை. இது மத்திய அரசின் திட்டமாகும்.

நாங்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கவில்லை. விவசாயிகளை அழைத்து அதிமுக அரசு பேசவில்லை. அதை செய்ய தான் சட்டமன்றத்தில் சொன்னோம். 8 வழி சாலை திட்டத்துக்கு எதிர்ப்பும் இல்லை ஆதரவும் இல்லை. இது முழுக்க அரசின் கொள்கை முடிவு. இந்த 8 வழி சாலை அமைக்கப்படுமா? இல்லையா? என அரசு தான் அறிவிக்கும். நான் பேசிய கருத்து தவறாக திரித்து கூறப்பட்டு விட்டது என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading