முக்கியச் செய்திகள்

“பா.ஜ.க.வின் பலம் கூடிவருகின்றது” – வானதி சீனிவாசன்

திமுக உட்பட பல கட்சிகளில் இருந்து பா.ஜ.க.வில் இணைகின்றனர். பா.ஜ.க.வின் பலம் கூடிவருகின்றது என்று எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதியிலிருந்து 48வது வார்டு பகுதியில் 15 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான நவீன அங்கன்வாடி மையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பூமி பூஜைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசுகையில், இன்று தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி மையத்திற்கு பூமி பூஜை நடத்தப்பட்டது. சட்டமன்ற தொகுதிக்கு 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகின்றது. அங்கன்வாடி மையங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியிருக்கின்றது. அங்கன்வாடி மையங்கள் அடிப்படை கல்விக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவும் வகையில் இருக்கிறது.

நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தில் கவனம் செலுத்த வேண்டும் என மகளிரணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கும் முக்கிய 10 பிரச்சினைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பட்டியல் கேட்டு இருக்கின்றார். கோவை மாவட்ட ஆட்சியரிம் இன்று அந்தப் பட்டியலை கோவை தெற்கு தொகுதி சார்பில் வழங்க இருக்கின்றேன். லங்கா கார்னர் பகுதியில் தண்ணீர் தேங்குவது உட்பட முக்கிய பிரச்சினைகளை அதில் குறிப்பிட்டுள்ளோம்.

அனைவருக்கும் பொதுவான முதல்வர் ஏன் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. சிறுபான்மையினருக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் ஏன் விநாயகர் சதுரத்திக்கு வாழ்த்து சொல்லவில்லை. கட்சியின் தலைவரிடம் கேட்கவில்லை. மாநிலத்தின் முதல்வரிடம்தான் கேட்கின்றோம். மாநிலத்தின் முதல்வர் திரும்ப திரும்ப இந்த தவறை செய்து கொண்டிருக்கின்றார்.

திமுக எதிர்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடுகின்றது. பா.ஜ.க. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது தவறு. பா.ஜ.க.வைவிட பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி எதுவும் இல்லை. திமுக உட்பட பல கட்சிகளில் இருந்து பா.ஜ.க.வில் இணைகின்றனர். பா.ஜ.க.வின் பலம் கூடிவருகின்றது என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram