முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னைக்கு திமுக அரசு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் – டிடிவி தினகரன்

வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னைக்கு திமுக அரசு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டும் என அமமுக பொதுச் செயலாள்ர்  டிடிவி தினகரன் தெரிவ்த்துள்ளார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளதாவது..

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”வெளிமாநில தொழிலாளர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பது, அவர்களை தமிழக அரசு வரன்முறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

அண்மைச் செய்தி :பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பில்கேட்ஸ்!

இதற்காகதான், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பறிபோவதைத் தடுக்கவும், அதே நேரத்தில் வெளிமாநில இளைஞர்களின் உழைப்பை உரிய வகையில் பயன்படுத்துவது குறித்தும் ஆராய்வதற்கு, நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்தக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி தமிழ்நாடு அரசு உரிய முடிவை காலதாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம்.


இதையும் படிக்க: வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை- டிஜிபி எச்சரிக்கை

ஆனால், அதனை தி.மு.க. அரசு காதில்வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்த விவகாரம் மாநிலங்களுக்கிடையேயான பிரச்னையாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பிறகாவது, வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்னையில் தி.மு.க. அரசு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

யாழன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சர்ச்சை கருத்து-தெலங்கானா பாஜக எம்எல்ஏ மீண்டும் கைது

Web Editor

ஊட்டியில் 140வது 30 கி.மீ அல்ட்ரா மாரத்தான் போட்டி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

Web Editor

“யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் கடினமான கேள்விகள்”

Web Editor