அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சென்னை கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, 15 வழக்குகள் நிலுவையில் இருப்பதோடு கண்ணகி நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவரை முறையாகக் கண்காணிக்கத் தவறியதே அப்பெண் மீண்டும் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடக் காரணமாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் கஞ்சா புழக்கமே இல்லை எனக்கூறிய மருத்துவத்துறை அமைச்சருடனே, கஞ்சா விற்றதாகக் கைது செய்யப்பட்ட பெண் எடுத்த புகைப்படத்தோடு, அவர் திமுகவின் நிர்வாகி எனப் பரவும் தகவல் தமிழகத்தில் திமுக தான் கஞ்சா விற்பனையை ஊக்குவிக்கிறதோ? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே, கஞ்சா விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்வோரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







