உத்தரபிரேதசத்தை சேர்ந்த 11 வயது சிறுவன், யூடியூப் மூலம் ஹேக் செய்ய கற்றுக்கொண்டு தன் தந்தையிடமே ரூ.10 கோடி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரேத மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன் யூடியூப்பில் அதிக நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். அவன் யூடியூப்பில் திரைப்படங்கள் மற்றும் பள்ளிப்பாடங்கள் குறித்து பார்த்து வந்ததாக பெற்றோர்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், அவனோ அடுத்தவரின் விவரங்களை எப்படி ஹேக் செய்வது என்பதை கற்றுக்கொண்டிருந்துள்ளான். ஒரு கட்டத்தில் எல்லை மீறிய அச்சிறுவன் தன் தந்தையின் தனிப்பட்ட விவரங்களை ஹேக் செய்து ரூ.10 கோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளான். மேலும் தான் கேட்ட பணத்தை கொடுக்க தவறினால், அவருடைய புகைப்படங்கள் மற்றும் விவரங்களை ஆன்லைனில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் அந்த சிறுவனுடைய தந்தை காசியாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுட்து ஐ.பி முகவரி குறித்து விசாரித்து வந்த போலீசார், புகார் அளித்தவரின் வீட்டிலிருந்து தான் மிரட்டல் வந்துள்ளது என்பதை கண்டுபிடித்தனர். மேலும் அவை அனைத்தையும் 11 வயது சிறுவன் தான் செய்தான் என்பது அவர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், செல்போன்கள் மூலம் சிறுவர்கள் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க பெற்றோர்கள் அவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.







