முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது; அண்ணாமலை

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் அதிகளவில் ஏழை மாணவர்கள் நீட்தேர்வு மூலமாக மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக அக்.6ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக அக்.9ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அக்கட்சி மாநில தலைவர் அண்ணாமாலை இன்று தூத்துக்குடி விமான நிலையம் வந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல மன அழுத்தங்களால் மாணவர்கள் உயிரிழந்து வரும் நிலையில், நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தொடர்ந்து திமுக, அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார். எனவே, நீட் விவகாரத்தில் மாணவர்களை குழப்பாமல் இருக்க, திமுக அமைதியாக இருந்தால் போதுமானது எனக்கூறினார். தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ஏழு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது எனக்கூறிய அண்ணாமலை, மீதமுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

1 லட்சம் பனை விதைகளை முதலமைச்சரிடம் வழங்கிய சபாநாயகர்

Ezhilarasan

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் 1,188 மனுக்களுக்கு தீர்வு: காவல் துறை

Ezhilarasan

கடன் வாங்கிய விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்திய விவகாரம்; இயக்குநர் கஸ்தூரிராஜாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Saravana Kumar