இந்தியா

JEE, NEET தேர்வுகளுக்கான பாடத்தின் குறைக்கப்படாது: மத்திய அமைச்சகம் திட்டவட்டம்!

JEE, NEET தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது, என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாணவ-மாணவிகளின் சுமைகளைக் குறைப்பதற்காக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் நீட், ஜே.இ.இ. தேர்வுக்கான பாடத்திட்டங்களில் மாற்றம் வருமா? என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் நடைபெற உள்ள JEE, NEET தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில், எவ்வித மாற்றமும் இருக்காது என்றும், ஆனால், விருப்பத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

JEE தேர்வில் 90 கேள்விகள் கேட்கப்படும் என்றும், அதில் 75 கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதுமானது, என்றும் அறிவித்துள்ளது. NEET தேர்விலும் இதேபோல் கூடுதல் விருப்பத் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், CBSE & மாநில அரசுகளின் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ள நிலையில், போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றமில்லை என்றும், மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

உதவித்தொகையுடன் அமெரிக்காவில் உயர்கல்வி – க்வாட் கூட்டமைப்பு அறிவிப்பு

Mohan Dass

பேரறிவாளன் விடுதலை: சட்டப் பிரிவு 142வது பிரிவு என்ன சொல்கிறது?

EZHILARASAN D

பட்ஜெட் 2022: மின்சார வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படும்

G SaravanaKumar

Leave a Reply