Skip to content
January 19, 2026
News7 Tamil

News7 Tamil

பொறுப்பும் பொதுநலனும்
News7 Tamil
  • Home
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • LiveT V
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
News7 Tamil
  • முக்கியச் செய்திகள்
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • ஆசிரியர் தேர்வு
  • கட்டுரைகள்
  • தொழில்நுட்பம்
  • சினிமா
  • வேலைவாய்ப்பு
  • விளையாட்டு
  • Fact Check Stories
sortd
Home » important news » dmk coral festival chief minister m k stalin inaugurated the logo at anna vidyalaya
முக்கியச் செய்திகள் தமிழகம்

#DMK பவள விழா – அண்ணா அறிவாலயத்தில் இலச்சினையை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திமுக பவள விழாவுக்கான லட்சினையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா திருவுருவச் சிலை முன்பு அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை…

Author Avatar

Web Editor

September 15, 202411:59 am arivalayamCMO TamilNaduDMKflagHBD Arignar AnnalogoMK StalinMupperum VizhaNews7TamilTN Govt
DMK Coral Festival - Chief Minister M.K.Stalin opened the plaque at the university!

திமுக பவள விழாவுக்கான லட்சினையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா திருவுருவச் சிலை முன்பு அண்ணா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

‘பேரறிஞர்’ அண்ணாவின் பிறந்தநாளான செப். 15-ம் தேதி ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு மற்றும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 116-வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர்கள் பலரும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருப்படம், திருவுருவச்சிலை உள்ளிட்டவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.

மேலும் அண்ணாவின் நினைவுகளையும், தமிழ்ச் சமுதாயத்துக்கு ஆற்றிய தொண்டையும் நினைவுப்படுத்தும் வகையில், பலரும் வாழ்த்துகளை பதிவு வாயிலாக பகிர்ந்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, செகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தொடர்ந்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15), பெரியார் பிறந்தநாள் (செப்.17), திமுக தொடங்கிய நாள் (செப்.17) என்ற மூன்றையும் இணைந்து ஆண்டுதோறும் முப்பெரும் விழாவை நடத்தி வருகிறது திமுக. இந்த ஆண்டு திமுக தொடங்கப்பட்டு 75வது ஆண்டு என்பதால் மிகச் சிறப்பாக கொண்டாட முடிவெடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் இந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது.

https://twitter.com/arivalayam/status/1835201909277577517

இந்நிலையில், இந்த ஆண்டு கட்சியின் பவள விழா ஆண்டாக இருப்பதால் அனைத்து கட்சியினர் வீடுகளிலும் திமுக கொடியேற்றி கொண்டாட திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வாயிலாக அறிவுறுத்தியுள்ளார். நாளை மறுநாள் (செப். 17) கொண்டாடவுள்ள திமுகவின் பவள விழாவுக்கான லட்சினையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் இந்த லட்சினை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திமுக பவள விழா லட்சினையில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவங்கள் இடம்பெற்றுள்ளன. உதயசூரியன் அமைப்புடன் 75 என்ற எண்ணும், திமுக பவள விழா என எழுத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Read More

கரூர் விவகாரம் : விஜய் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன – சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றச்சாட்டு……..!

By Web Editor January 19, 2026

திமுக ஆட்சியில் தொடர்கதையான அரசுப் பேருந்துகள் விபத்து – நயினார் நாகேந்திரன் விமர்சனம்…!

By Web Editor January 19, 2026

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : யார் நலனிலும் திமுக அரசுக்கு அக்கறையில்லையா? – அன்புமணி ராமதாஸ்….!

By Web Editor January 19, 2026

சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தால் பாதிக்கப்படுவது பள்ளி மாணவர்களே – அண்ணாமலை..!

By Web Editor January 19, 2026
#ट्रेंडिंग हैशटैग:arivalayamCMO TamilNaduDMKflagHBD Arignar AnnalogoMK StalinMupperum VizhaNews7TamilTN Govt

Post navigation

Previous Previous post: முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவை – குஜராத்தில் நாளை தொடங்கி வைக்கிறார் #PMModi
Next Next post: பயிர்களை சேதப்படுத்திவிட்டு, குத்தாட்டத்தோடு குளியல் போட்ட யானைகள்… விரட்டும் பணியில் #ForestDepartment!
  • About Us
  • Contact us
  • Privacy
  • Advertisement
  • YouTube
  • X
  • Instagram
  • Facebook
  • WhatsApp
© Copyright All right reserved By News7 Tamil WordPress Powered By

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading