திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்தது?

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதியிலும் திமுகவை வெற்றி பெற செய்யாவிட்டால், உயிரிழப்பு செய்துக்கொள்வேன் என எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, கூட்டணியிலிருந்து விலகி தனி கூட்டணி அமைத்து போட்டியிட…

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதியிலும் திமுகவை வெற்றி பெற செய்யாவிட்டால், உயிரிழப்பு செய்துக்கொள்வேன் என எம்.பி ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக, கூட்டணியிலிருந்து விலகி தனி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கு கட்சி தலைமையும் அனுமதி அளித்து, முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனை, புதுச்சேரி மாநில பொறுப்பாளராக நியமித்துள்ளது. இந்நிலையில், மரப்பாலம் சந்திப்பில், எம்பி ஜெகத்ரட்சகன் தலைமையில், திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அவர், புதுச்சேரியில் ஏன் இன்னும் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை? ஏன் ஆலைகளை திறக்க முடியாது, என ஆளும் அரசை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பது என்ன பெரிய விஷயமா? என கேள்வி எழுப்பிய அவர், 10 நிறுவனங்களை கொண்டு வந்தால், ஒரே வருடத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை கொடுத்து விடலாம், எனக்கூறினார். மேலும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் திமுகவை வெற்றிபெற செய்யாவிட்டால், இந்த மேடையிலேயே உயிரிழப்பு செய்துக்கொள்வேன், என எம்பி ஜெகத்ரட்சகன் ஆவேசமாக பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply