முதல்வர் திடீரென டெல்லிக்கு சென்றிருப்பது அரசியல் நிலைப்பாடுகள் சம்பந்தமான பயணமாக இருக்கும் என்பதையே யூகிக்க வேண்டியுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சசிகலா விடுதலையாகி வந்தால் அதிமுக, அமமுக இடையே மாறுபாட்ட கருத்தோ அல்லது உடன்பாடான கருத்தோ ஏற்படலாம் எனக்கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 2 மாதங்களாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது வேதனை அளிக்கிறது எனக்கூறினார். தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி ஈவு, இரக்கம் காட்டாமல் பிடிவாதமாக இருப்பது கண்டத்துக்குரியது என குறிப்பிட்டார்.எனவே, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி வரும் 21ஆம் தேதி விசிக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன போராட்டம் நடத்தப்படும் எனக்கூறினார். மேலும் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் தான் கலந்துகொள்வதாக திருமாவளவன் தெரிவித்தார்.