முக்கியச் செய்திகள் தமிழகம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று போராட்டம் நடத்துகின்றன.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் கடந்த மாதம் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாதது, பெட்ரோல் – டீசல் – சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு,  வேலையில்லா திண்டாட் டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவ தும் கண்டன போராட்டம் நடக்கிறது.

முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட கூட்டணி கட்சியினர் தங்கள் வீடுகள் முன் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளதால், வீடுகளுக்கு முன் போராட்டம் நடத்த இருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram