திமுக மற்றும் பாஜகவினர் போட்டி முழக்கம்

பிரதமர் இன்னும் சற்று நேரத்தில் வருகை தர உள்ள நிலையில் பாஜக மற்றும் திமுகவினர் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். ரயில்வே, சாலை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்னும்…

பிரதமர் இன்னும் சற்று நேரத்தில் வருகை தர உள்ள நிலையில் பாஜக மற்றும் திமுகவினர் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

ரயில்வே, சாலை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் சென்னை வருகை தருகிறார். மாலை 5.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள வருகிறார்.

பிரதமர் மோடியை வரவேற்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட பாஜகவினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். மேளதாளம், கலை நிகழ்ச்சிகள், பதாகைகள், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

நேரு அரங்கம் செல்லும் வழியெங்கும் பாஜகவினர் சூழ்ந்துள்ள நிலையில், திமுக தொண்டர்கள் அங்கு உள்ளனர். வாழ்க வாழ்க வாழ்கவே அய்யா பெரியார் வாழ்கவே, டாக்டர் கலைஞர் வாழ்கவே என திமுகவினர் ஒரு பக்கம் முழக்கமிட, பாரத் மாதா கி ஜே என பாஜகவினர் முழக்கமிடுகின்றனர். அதுபோலவே நாளைய முதல்வர் அண்ணாமலை வாழ்க என்றும் பாஜகவினர் உற்சாக முழக்கம் எழுப்பினர். பிரதமரும் முதலமைச்சரும் விழாவில் பங்கேற்பதால் திமுக கொடிகளும் பாஜக கொடிகளும் அருகருகே கட்டப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.