முக்கியச் செய்திகள் தமிழகம்

காமராசருக்காக மண்டபத்தை மாற்றிய கலைஞர்-மனம் திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தமிழக முன்னாள் முதல்வர் காமராசரின் வருகைக்காக எனது திருமண விழாவிற்கு திருமண மண்டபத்தையே கலைஞர் கருணாநிதி மாற்றினார். உடல் நலமற்ற நிலையிலும் மணமேடை வரை காரில் வந்து காமராசர் எனது திருமணத்தில் பங்கேற்றார்”
என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 ஜோடிகளுக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 33 வகையான இலவச சீர்வரிசைப் பொருட்களை மணமக்களுக்கு வழங்கினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு திமுக சார்பில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மணமக்களுக்கு மாலை மற்றும் தாலி எடுத்து கொடுத்து மலர் தூவி வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:
நான் முதல் முறை கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினராகி ஆய்வு நடத்தியபோது இந்த மண்டபம் சமூக விரோதிகளால் பாழடைந்து கிடந்தது. காமராசரால் 1966ம் ஆண்டு இந்த மண்டபம் திறக்கப்பட்டது. நான் இந்த மண்டபத்தை சீர் செய்யக் கூடாது என அரசியல் காழ்ப்புணர்வால் சிலர் வழக்கு தொடர்ந்தனர். கழக வழக்கறிஞர்கள் மூலம் தீர்ப்புப் பெற்று குளிர்சாதனம், லிஃப்ட் , பார்க்கிங் வசதியுடன் முழுமையாக மண்டபத்தை கட்டி முடித்துள்ளோம். 700 பேர் வரை மண்டபத்தில் அமர முடியும். மண்டபத்தை சீரமைத்த பிறகும் காமராசர் பெயரிலேயே இந்த மண்டபம் இருக்கிறது. அவர் திறந்து வைத்ததற்கான கல்வெட்டும் அப்படியே இருக்கிறது. அரசியல் ரீதியாக மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் காமராசரை மதிப்பவன் நான். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தினார் காமராசர். கருணாநிதி என் திருமண அழைப்பிதழை காமராசரிடம் கொடுத்தபோது ஸ்டாலின் சுறுசுறுப்பான இளைஞராக இருப்பதாக கேள்விப்பட்டுள்ளேன். அவரது திருமணத்திற்கு நேரில் வர ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு உடல் நலம் இல்லையே என்றார். உடனே கருணாநிதி , நீங்கள் வருவதாக இருந்தால் திருமண மண்டபத்தையே மாற்றத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார் கலைஞர்.

அதன்படி காமராசரின் கார் மணமேடைவரை வருவதற்கு ஏற்றவாறு , ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட மண்டபத்தில் இல்லாமல், மாற்று மண்டபத்தில் எனக்கு திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், கவிஞர் பாரதிதாசன் கூறியபடி “வீட்டிற்கு விளக்காக , நாட்டிற்கு தொண்டராக வாழுங்கள்” என வாழ்த்தி விடைபெறுகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார் காமராசர்.
திருமண நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவிக நகர், பல்லவன் சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் ரூ.2.83 கோடி மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அமைச்சர் கே.என்.நேரு , சேகர்பாபு , மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை மாநகராட்சியின் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இலங்கை அகதிகள் 4 பேர் ராமேஸ்வரத்தில் தஞ்சம்…

Web Editor

ரூ.46 கோடி நிதி திரட்டி தம்பியை காப்பாற்றிவிட்டு அக்கா உயிரிழந்த சோகம்…

Web Editor

காதலி இறந்த சோகம்: ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் தற்கொலை

Arivazhagan Chinnasamy