கொமதேக-விற்கு 2 தொகுதிகளை ஒதுக்கிய திமுக……!

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க ஆளும் திமுக கட்சி கடும் முயற்சிகளை மேற்கோண்டு வருகிறது.

கூட்டணியில் தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகளை சேர்த்ததுடன் தொகுதி பங்கீட்டையும் திமுக இறுதிசெய்து வருகிறது. அதன் படி நேற்று முன்தினம் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவிற்கு 4 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் கொங்கு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த இரண்டு தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்திலேயே கொமதேக போட்டியிடுகிறது.

இந்த ஒப்பந்தமானது இன்று சென்னை அண்ணா அறிவாயலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் இடையே கையெழுத்தானது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.