“புதிதாக அரசியலுக்கு வருபவர்களை பார்த்து பயந்து ஓடும் கூட்டம் அல்ல தேமுதிக” – விஜய பிரபாகன் பேச்சு!

புதிதாக அரசியலுக்கு வருபவர்களை பார்த்து பயந்து ஓடும் கூட்டம் அல்ல தேமுதிக என விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.

திண்டிவனம் அடுத்த ஆத்தூரில் மறைந்த விஜயகாந்த்தின் உதவியாளர் சின்ன குமார் என்பவரது இல்ல நிகழ்வு நடைபெற்றது.  இதில் கலந்து கொள்ள வருகை தந்த விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிக மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட இரு
சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அணிவகுக்க பிரம்மாண்ட வரவேற்பு
அளிக்கப்பட்டது.

தொடர்ந்து விழா மேடையில் விஜய பிரபாகரன் பேசியபோது, “எப்போதும் தேர்தல் நேரங்களில் தேமுதிக குறித்த வதந்திகளும் , பொய் பிரச்சாரங்களும்  வருவது வழக்கம்.  அதிமுக – பாஜக கூட்டணி உருவாகியுள்ள நிலையில், தேமுதிகவிற்கு சிங்கிள் டிஜிட் சீட்டுகள் வழங்கப்பட உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில்,
இதில் தேமுதிக எங்கு வருகின்றது? மக்கள் மனதில்  ஸ்லோ பாய்சன் போன்று தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதை பார்த்தால் தேமுதிகவை பார்த்து அனைவரும் அச்சப்படுவது போன்று உள்ளது.  எங்களுடைய மதிப்பும், மரியாதையும், தேமுதிக நிர்வாகிகளுடைய உழைப்பும் மக்களுக்கு தெரியும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் இருப்பதால் கூட்டணி
குறித்து நாங்கள் இப்பொழுது முடிவெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

எங்களுக்கு சிங்கிள் டிஜிட் சீட்டா அல்லது டபுள் டிஜிட் சீட்டா என்பது எங்கள்
தலைவர்களும், நாங்கள் கூட்டணி வைக்கும் கட்சி தலைவர்களும்
சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. இதனை அரசியல் விமர்சனங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இனி எல்லா கட்சிகளிலும் அடுத்தகட்ட தலைவர்கள் வருகிறார்கள். நடிகர்கள் அரசியலில் வருகிறார்கள். இதைப் பார்த்து பயந்து ஓடும் கூட்டம் தேதிமுக அல்ல. தேமுதிக எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த கட்சி. எல்லா சவாலையும் தாண்டி சண்டை செய்ய ரெடியாக இருக்கிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.