#DMDK தலைவர் விஜயகாந்த் இல்லம் முன் நள்ளிரவில் கூச்சலிடும் மர்ம நபர்கள்… நடந்தது என்ன?

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க கோரி, சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை விருகம்பாக்கம் கண்ணம்மாள் தெருவில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்தின் வீடு…

#DMDK chief Vijayakanth's petition for security at home!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க கோரி, சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் கண்ணம்மாள் தெருவில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்தின் வீடு உள்ளது. 2005-ம் ஆண்டு கட்சித் தொடங்கிய விஜயகாந்த், இரண்டாவது தேர்தலிலேயே எதிர்க்கட்சி தலைவர் ஆனார். அன்று முதல் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் விஜயகாந்த் வீட்டிற்கு போடப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இச்சூழலில் விஜயகாந்த் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க கோரி, தேமுதிக விருகம்பாக்கம் பகுதி செயலாளர் லட்சுமணன், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். இரவு நேரத்தில் வீட்டின் வாசலில் வந்து நின்று சிலர் கூச்சலிடுவதாகவும், தொந்தரவு செய்வதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் காவல்துறையினர் மீண்டும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.