34 C
Chennai
May 12, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

தீபாவளி பண்டியையொட்டி ரயில்களுக்கான முன்பதிவு: தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது!

தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. இந்த நிலையில்  டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை
அடுத்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க
ரயில் முன்பதிவு செய்வது வழக்கம். ரயில் 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு
துவங்கும் அதன் படி தீபாவளிக்கு செல்ல நவம்பர் 9 ஆம் தேதி வியாழக்கிழை பயணம்
செய்வோருக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ரயில்வே கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட்
முன்பதிவு செய்து செய்யப்பட்டது. ரயில் நிலையங்களுக்கு வருவதை காட்டிலும்
பெரும்பாலானவர்கள் ஆப் மூலம் முன்பதிவு செய்தனர்.

தென்மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி,கன்னியாகுமரி செல்லக்
கூடிய விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட் விற்பனை
தொடங்கிய 15 நிமிடத்திற்குள்ளாக விற்று தீர்ந்தது.

அதே போல நவம்பர் 10 தேதி வெள்ளிக்கிழமை பயணத்திற்கு நாளையும் நவம்பர் 11 ம் தேதி பயணத்திற்கு ஜூலை 14ம் தேதியும் முன்பதிவு செய்யலாம். வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் சிறப்பு ரயில் மற்றும் அதற்கான முன்பதிவு அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading