“விவாகரத்து ஜெயம் ரவியின் தனிப்பட்ட முடிவு… அவருடன் பேச தயார்” – #Aarti அறிக்கை!

விவாகரத்து ஜெயம் ரவி எடுத்த தனிப்பட்ட முடிவு எனவும், தான் அவருடன் பேச தயாராக இருப்பதாகவும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார். நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக கடந்த…

விவாகரத்து ஜெயம் ரவி எடுத்த தனிப்பட்ட முடிவு எனவும், தான் அவருடன் பேச தயாராக இருப்பதாகவும் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதனுடன், நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, “இது எனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், ஆர்த்தி விவாகரத்து விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பொதுவெளியில் பகிரப்படும் கருத்துக்களை பார்த்து நான் அமைதியாக இருப்பது எனது பலவீனம் மற்றும் குற்ற உணர்வினால் அல்ல. உண்மையை மறைக்க என்னைப் பற்றி மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் நான் கண்ணியமாக இருக்கிறேன். ஆனால் நீதி நிலை நிறுத்தப்படும் என நம்புகிறேன்.

தெளிவாக சொல்வது என்றால் நான் ஏற்கனவே விடுத்த அறிக்கையில் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு என தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது அவர் எடுத்த தனிப்பட்ட முடிவு தான். அவரின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. நான் அவருடன் பேச தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கான வாய்ப்பு இப்போது வரை எனக்கு மறுக்கப்பட்டுள்ளது. திருமண பந்தத்தை நான் மிகவும் மதிக்கிறேன். இது பற்றி பொதுவெளியில் பேசி யாருடைய மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. என்னுடைய குடும்பத்தின் நலமே எனக்கு முக்கியம். கடவுளின் அருள் கிடைக்கும் என நம்புகிறேன்”.

இவ்வாறு ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.