விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற திருமண நிகழ்வில் நடனமாடுவதில் ஏற்பட்ட தகராறில், பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலக்கொந்தை சேர்ந்த மைக்கேல்ராஜ் மற்றும் கப்பியாம்புலியூரைச் சேர்ந்த பரணிஷா ஆகியோருக்கு திருமண நிகழ்வு நேற்று இரவு வரவேற்புடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சியில், டிஜே நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது, நடனமாடிக்கொண்டிருந்த பெண் வீட்டாருக்கும்,மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் கையில் கிடைத்த தடி மற்றும் கற்கலைக் கொண்டு சரமாரியாக தக்கிக்கொண்டுள்ளனர்.
அண்மைச் செய்தி: ‘ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க, அருவியில் குளிக்கத் தடை’
இதனைப் பார்த்த மற்ற உறவினர்கள் அவர்களைத் தடுக்க முயன்றுள்ளனர். ஆனாலும், மாறி மாறி ஒருவரை ஒருவர் மீண்டும் மீண்டும் தக்கியுள்ளனர். இதனைப் பார்த்த இளைஞர் ஒருவர் இந்த நிகழ்வை ரசித்து வீடியோவாக தனது போனில் எடுத்து உள்ளார். எடுத்த வீடியோவை என்ன செய்வது என நினைத்த அந்த இளைஞர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை தற்போது சமூக வலைத்தள நண்பர்கள் அதிக அளவில் பரப்பி வருகின்றனர். காவல்துறை தலையீடு இல்லாமல் அவர்களாகவே சமாதானம் செய்துகொண்டு திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.








