முக்கியச் செய்திகள் தமிழகம்

“மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும்” – அமைச்சர்

மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும் என்பதை தெரிந்து கொண்டு அவர்களுக்கான திட்டங்களை திமுக செயல்படுத்தி வருகிறது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

மதுரையில் தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் பெண்கள் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக “தொழிலணங்கு” என்ற தலைப்பில் நிகழ்வு நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொள்முதல் செய்யும் நிறுவனங்களின் விருப்ப கடிதங்கள் வழங்கப்பட்டன. விழாவில் சிறப்புரையாற்றிய அமைச்சர் பி.டி.ஆர், “திராவிட இயக்கம் தோன்றிய காலத்திலிருந்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தத்துவமும், கொள்கையும் எவ்வளவு முக்கியமே அந்த அளவிற்கு செயல்திறன் மிக முக்கியமானது” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 23 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட சுய உதவி குழுக்கள் இடையே ஏற்ற தாழ்வு இருக்கிறது என்றும், சில இடங்களில் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டில் உள்ளது, சில இடங்களில் செயல்பாட்டில் இல்லை எனவும் குறிப்பிட்டார். மேலும், “சுய உதவிக் குழுக்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மதுரையை முன் மாதிரியாக கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு திட்டங்கள் கொண்டு வர உள்ளோம்” என்று கூறிய அவர்,

மதுரையை தொடர்ந்து தமிழகம் முழுதும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், 30 ஆண்டுகளாக வெளிநாடுகளில் உயர் பொறுப்புகளை வகித்து இருக்கிறேன் இந்த அனுபவம் மூலம், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே சமுதாயம் வளரும் என்பதை தெரிந்து கொண்டுள்ளேன் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நவம்பர் 1-ஐ தமிழர் இறையாண்மை நாளாக அறிவித்திடுக – விசிக கோரிக்கை

Halley Karthik

ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை

Gayathri Venkatesan

ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு

Ezhilarasan