7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது டிஸ்னி நிறுவனம்

மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் துறையில் முன்னணி நிறுவனமான டிஸ்னி 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு…

மீடியா மற்றும் எண்டர்டெயின்மெண்ட் துறையில் முன்னணி நிறுவனமான டிஸ்னி 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவில் பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள் என மிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.

மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஆல்பபெட் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஸ்பாடிபை நிறுவனம் 600 ஊழியர்களும் ஜூம் நிறுவனம் 1300 ஊழியர்களையும் சமீபத்தில் பணி நீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் எண்டர்டெயிமெண்ட் துறையில் உலகின் முன்னணி நிறுவனமான டிஸ்னி 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாப் இகெர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுதான் பாப் டிஸ்னி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னி நிறுவனத்தில் சப்ஸ்கிரைபர்களின் மொத்த எண்ணிக்கையில் ஒரு சதவீதம் குறைந்ததையடுத்து இந்த நடவடிக்கையை டிஸ்னி நிறுவனம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் வாடிக்கையாளர்கள் தங்களது செலவுகளை குறைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக வாடிக்கயாளர்களின் எண்ணிக்கை டிஸ்னி நிறுவனத்துக்கு குறைந்துள்ளது.

இந்த பணிநீக்கம் தொடர்பாக தலைமைச் செயல் அதிகாரி பாப் கூறுகையில், “பணிநீக்க முடிவை நான் எளிதாக எடுக்கவில்லை. எங்களுடன் பணிபுரிந்த ஊழியர்கள் மீது மிகப் பெரிய மரியாதை வைத்துள்ளேன். அவர்களின் திறமையை மதிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.