லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம்

அரியலூர் மாவட்டம் விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உத்தரவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.02.2023 அன்று…

அரியலூர் மாவட்டம் விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட
கிராம நிர்வாக அலுவலர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24.02.2023 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு சிட்டா அடங்கல் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

அதன் பின்னர், ஆண்டிமடம் வட்டம், திருக்களப்பூர், கிராம நிர்வாக அலுவலராக
பணிபுரிந்து வரும் பொற்செல்வி என்பவர் சிட்டா அடங்கல் வழங்குவதற்கு விவசாயிகளிடமிருந்து ரூ.1000 லஞ்சம் கேட்பதாக வீடியோ ஆதாரம் கிடைக்கப்பெற்றது.

இதைத் தொடர்ந்து, திருக்களப்பூர் கிராம நிர்வாக அலுவலர் பொற்செல்வி தற்காலிக
பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி
தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.