முக்கியச் செய்திகள் இந்தியா

மாதவிடாய் விடுப்பு கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு!

வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் சைலேந்திரமணி திரிபாதி என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வேலைக்குச் செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் தாமக முன்வந்து விடுப்பு வழங்கி வருகிறது. இதனை அரசுகளும்  பின்பற்றும் வகையில் நாடு முழுவதும் உத்தரவு பிறப்பித்து மாதவிடாய் விடுப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு பிப்ரவரி 24ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா, நீதிபதி ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.

இதுகுறித்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், இந்த விவகாரம் கொள்கை முடிவு சார்ந்தது என்பதால் நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டால் வரும்காலத்தில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது குறையும் வாய்ப்புள்ளது. இந்த வழக்கின் கொள்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை மனுதாரர் அணுகலாம் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தூய்மையான நகரம்; தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்தூர்

G SaravanaKumar

முககவசம் அணியாதவர்கள் மீது வழக்குப் பதிவு!

Gayathri Venkatesan

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே CGL தேர்வு – கனிமொழி எம்.பி கண்டனம்

EZHILARASAN D