தூத்துக்குடி எஸ்.ஜே.ஜெகன் மீது ஒழுங்கு நடவடிக்கை – திமுக

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி மாநகரத்தைச் சேர்ந்த எஸ்.ஜே.ஜெகன், கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி மாநகரத்தைச் சேர்ந்த எஸ்.ஜே.ஜெகன்,…

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி மாநகரத்தைச் சேர்ந்த எஸ்.ஜே.ஜெகன், கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி மாநகரத்தைச் சேர்ந்த எஸ்.ஜே.ஜெகன், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், ஆளுங்கட்சி எனக்கூறி அக்கட்சியைச் சார்ந்தவர்கள் அராஜகத்தில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்பட்டது. ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல், கட்சி  உறுப்பினர், பொறுப்பாளர் என யார் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டாலும், உடனடியாக தலைமை உரிய விசாரணையை மேற்கொண்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், தூத்துக்குடி மாநகரத்தைச் சேர்ந்த எஸ்.ஜே.ஜெகனும் நீக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.