“நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாடா? உடனே களைந்து விடுங்கள்!” – இபிஎஸ் அறிவுரை

நிர்வாகிகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை உடனடியாக களைய வேண்டும் என்றும்,  கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக செயல்பட வேண்டும் என்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக…

நிர்வாகிகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை உடனடியாக களைய வேண்டும் என்றும்,  கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக செயல்பட வேண்டும் என்றும் அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  தங்களுக்கு உட்பட்ட மக்களவை தொகுதியில் சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளின் பட்டியலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.  தேர்தல் பணிகளை அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு வலிறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள் : அரசுப் பேருந்தை இயக்கிய அனுபவமற்ற ஓட்டுநர் – நடுவழியில் பேருந்தை தள்ளிச் சென்ற பயணிகள்!!

மேலும்,  நிர்வாகிகளுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை உடனடியாக களைய வேண்டும் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,  கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் சுமூகமாக செயல்பட வேண்டும் என்றும்,  மாற்றுக் கட்சியில் உள்ளவர்களை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக கவனம் செலுத்தி கட்சியில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.