நடிகர் விஜய்-ன் பேச்சு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன், அம்பேத்கர், பெரியார், காமராசருடன் அண்ணாவையும் சேர்த்து படிக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
முழுமையாக கல்வி என்று சொல்கிறோம். பள்ளி கல்லூரி மட்டும் முழுமையான கல்வி இல்லை. ஐன்ஸ்டீன் சொன்னார், பள்ளிக்கு போய் படித்து கற்றுக் கொண்டது மறந்த பின் எஞ்சி இருப்பது தான் கல்வி என்றார். முதலில் புரியவில்லை பின்பு கொஞ்சம் கொஞ்சம் புரிந்தது. எனக்கே புரிகிறது என்றால் உங்களுக்கும் புரியும். Maths, econmics , chemistry தாண்டி மனதில் இருப்பது கேரக்டர், சிந்திக்கும் திறன். மதிப்பெண் grades முக்கியம் தான் characters சிந்திக்கும் திறனுக்கும் முக்கியதுவம் இருக்க வேண்டும்.
படத்தின் கதை சொல்ல கேட்பதுண்டு, இப்போது வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளேன். முடிந்தவரை படியுங்கள் அனைத்து தலைவர்களையும் கட்சிகளையும் தெரிந்து கொள்ளுங்கள் அம்பேத்கர், பெரியார் பற்றி படியுங்கள்.காமராஜர் பற்றியும் படியுங்கள் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றதை விட்டு விடுங்கள். இது தான் இன்றைய செய்தி.






