ஒமிக்ரான் பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் தவிர்க்குமாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளதாக தெரிவித்தார். ஒமிக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 34 பேரில், 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். பொதுமக்கள், புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்த்துக் கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,43,427ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 686 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,99,994 ஆக அதிகரித்துள்ளது.
தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 6708 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,725 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக சென்னையில் 165 பேருக்கும் கோயம்புத்தூரில் 87 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.








