ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் பாடல் காட்சி ஷூட்டிங் புனேவில் நடந்து வருகிறது.
இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தனது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தப் படத்தின் தொடக்க விழா கடந்த மாதம் ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. ராம் சரண் ஜோடியாக, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். ஜெயராம், அஞ்சலி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
இதன் பாடல் காட்சி படப்பிடிப்பு புனே அருகே, இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்தப் பாடல் காட்சியில் ராம் சரண் தேஜாவும் கியாரா அத்வானியும் பங்கேற்றுள்ளனர். கூடவே ஏராளமான டான்சர்களும் பங்கேற்றுள்ளனர். தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில், இந்தப் பாடல் காட்சி உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஷங்கர் பிரமாண்டத்தில் மிரட்டுவார் என்பதால், இந்த பாடல் காட்சியும் மிரட்டும் என்கிறார்கள்.
இந்தப் பாடல் காட்சியின் ஐடியா புதுமையானது என்றும் வேற லெவலில் பாடல் காட்சி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் 12 நாட்கள் இந்தப் பாடல் காட்சி படமாக்கப் பட இருக்கிறது.