இயக்குநர் ஷங்கர் ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் 15வது படத்தை இயக்கி வருகிறார்.
பிராமண்டத்துக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கர் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு முன்பே இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. ஆனால், படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்து மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் போன்றவை காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது. கமல்ஹாசன் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதேபோல தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில், அவரின் 15வது படத்தையும் #RC15 ஷங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தை ஶ்ரீவெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி ராம்சரணின் படத்துக்காக ஹைதராபாத் சார்மினாரில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக ஷங்கர் ட்விட்டரில் அப்டேட் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக ஷங்கர் ட்வீட் செய்திருக்கிறார். சென்னையில் அடுத்த ஒரு மாதத்துக்கு இந்தியன் 2 படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்தாண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனிடையே வசந்தபாலன் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிக்கும் அநீதி என்ற படத்தை ஷங்கர் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-ம.பவித்ரா








