திரைத்துறையின் முன்னோடிகளுக்கு சீனுராமசாமி மரியாதை

திரைத்துறையின் முன்னோடிகளுக்கு இயக்குநர் சீனுராமசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சீனுராமசாமியின் அடுத்த படைப்பான மாமனிதன் திரைப்படம் ஜுன் 24 ஆம் தேதி வெளியாகிறது. …

திரைத்துறையின் முன்னோடிகளுக்கு இயக்குநர் சீனுராமசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சீனுராமசாமியின் அடுத்த படைப்பான மாமனிதன் திரைப்படம் ஜுன் 24 ஆம் தேதி வெளியாகிறது.  முற்றிலும் கிராமத்து கதைகளத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து இசையமைக்கின்றனர். நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷின் நைன் நிறுவனம் இத்திரைப்படத்தை வெளியிடுகிறது. மேலும் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.பி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் ’இடிமுழக்கம்’ படமும் தற்போது வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் திரைத்துறையின் முன்னோடிகளான முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் நடிகர் சிவாஜி கணேசன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இயக்குநர் சீனுராமசாமி, மேலும் இது குறித்து பேசிய அவர் ’தமிழ்ச்சினிமாவின் மாமனிதர்கள் எனக்குள் உண்டாக்கிய கலை உணர்வுக்கு நன்றி கூறும் விதமாக என் அன்பை மலர்களாக சமர்ப்பித்தேன்’ என்றார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.