பா. ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ யார் தெரியுமா?

இயக்குநர் பா. ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ளது. கோலார் தங்கச் சுரங்கம் உருவாவதற்கு…

இயக்குநர் பா. ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ளது. கோலார் தங்கச் சுரங்கம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியிருந்தது.

மாய எதார்த்தம் மற்றும் தங்கத்தின் மீதான ஆசையும் அதன் தொடர்ச்சியான துன்பமும் என புத்த குறியீடுகளை வைத்து காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருந்தனர். இந்த திரைப்படத்தைத் தொடர்ந்து, பா. ரஞ்சித் நடிகர் ஆர்யாவை வைத்து சார்பட்டா – 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : Question Paper வடிவில் #WeddingInvitation – ஆந்திராவில் அசத்திய திருமண ஜோடி!

ஆனால், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பா. ரஞ்சித் – நடிகர் சூர்யா கூட்டணியில், ’ஜெர்மன்’ என்கிற திரைப்படம் உருவாக உள்ளதாகவும் இதை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. ’ஜெர்மன்’ திரைப்படத்தின் பேச்சுவார்த்தைகள் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்தது. விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என ரஞ்சித் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.