தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் #ChiefSecretary முருகானந்தம் சந்திப்பு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள்…

#ChiefSecretary Muruganantham meeting with Tamil Nadu Governor RN Ravi!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் முருகானந்தம் சந்தித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனவும் தகவல் வெளியானது.

அமைச்சராக இருக்கும் மெய்யநாதன் அல்லது சி.வி.கணேசன் இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்பை தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் தொடர்பான செய்திகள் வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக முருகானந்தம் பொறுப்பேற்ற பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.