“உணர்ச்சிப்பூர்வமான கதையில் சிவகார்த்திகேயன் என்ன செய்திருப்பார் என ஆவலாக இருக்கிறேன்” – SK-21 படக்குழுவை பாராட்டிய நெல்சன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படத்தின் டீசரை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பார்த்துவிட்டு இது குறித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருவிழாவையொட்டி வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் இதுவரை…

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படத்தின் டீசரை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பார்த்துவிட்டு இது குறித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருவிழாவையொட்டி வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததுடன் இதுவரை ரூ.70 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  ‘அயலான்’  திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையடுத்து, சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். மேலும், இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் மற்றும் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடத்த தடைவிதிக்கவில்லை – பொய்ச்செய்திக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்!

மேலும், இத்திரைப்படத்தின் பெயர் அறிவிப்பு டீசர் விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், இயக்குநர் நெல்சன் டீசரைப் பார்த்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட நெல்சன், “வாவ். இப்போதுதான் எஸ்கே -21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரைப் பார்த்தேன். சீற்றம் கொண்ட இந்த உணர்ச்சிப்பூர்வமான கதையில் சிவகார்த்திகேயன் என்ன செய்திருப்பார் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் ராஜ்குமார் பெரியசாமி. எஸ்கே படக்குழுவுக்கு பெரிய பாராட்டுகள்” எனப் பதிவிட்டுள்ளார். 

https://twitter.com/Nelsondilpkumar/status/1748936437871919134

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.