இளையராஜாவை நேரில் சந்தித்த இயக்குநர் பா.ரஞ்சித்!

இயக்குநர் பா.ரஞ்சித் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்தார். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி திருவோது உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது.…

இயக்குநர் பா.ரஞ்சித் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்தார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி திருவோது உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருக்கும் திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

‘தங்கலான்’ திரைப்படம் அடுத்தாண்டு திரைக்கு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,  இந்த திரைப்படம் உலகத் திரைப்பட விழாகளுக்கும் செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : மத்திய சிறையில், திமுக அமைச்சர்களுக்கு ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் – அண்ணாமலை பதிவு!

ஒவ்வொரு ஆண்டும் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக மார்கழி மக்கள் இசையை நடத்தி வரும் இயக்குநர் பா.ரஞ்சித்,  இந்த ஆண்டு வரும் டிசம்பர் 23ஆம் தேதி கே.ஜி எஃப் மற்றும் 24ஆம் தேதி ஓசூரிலும் என இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் சென்னையில் 28, 29,30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பா.இரஞ்சித் இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்தார். அந்த சந்திப்பில் ‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சிக்கு அழைப்பிதழைக் கொடுக்க சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.