இயக்குனரும் நடிகருமான ஈ.ராமதாஸ் காலமானார்; திரைத்துறையினர் இரங்கல்

தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஈ.ராமதாஸ் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். தமிழ் திரைதுறையில் ஆயிரம் பூக்கள் மலரட்டும் எனும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஈ.ராமதாஸ், ராஜா ராஜா தான், வாழ்க…

தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான ஈ.ராமதாஸ் நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.

தமிழ் திரைதுறையில் ஆயிரம் பூக்கள் மலரட்டும் எனும் திரைப்படம் மூலம்
இயக்குனராக அறிமுகமான ஈ.ராமதாஸ், ராஜா ராஜா தான், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஏராளமான படங்களுக்கு கதாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.


பன்முக திறன் கொண்ட இவர், வசூல் ராஜா எம்பிபிஎஸ், யுத்தம் செய், மாரி உள்ளிட்ட
பல்வேறு வெற்றி படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்து
பிரபலமடைந்தார்.

சென்னை கே.கே.நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர் வயது மூப்பு
காரணமாகவும் உடல் நல குறைபாடு காரணமாகவும் அமைந்தகரையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், நேற்று இரவு
10 மணி அளவில் நெஞ்சு வலி காரணமாக ஈ.ராமதாஸ் உயிரிழந்ததாக அவரது மகன்
கலைச்செல்வன் தெரிவித்தார்.


கே.கே.நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஈ.ராமதாசின் உடல் காலை 11 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. பின்னர் மாலை 5 மணி அளவில்
நெசப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள்
தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.