ஓடிடியில் வெளியானது #TEENZ திரைப்படம்

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான ‘டீன்ஸ்’ திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கத்தில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘டீன்ஸ்’. பல புதுமுக குழந்தை…

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான ‘டீன்ஸ்’ திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கத்தில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘டீன்ஸ்’. பல புதுமுக குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : Bike is not mechanism.. its emotion – பைக்கிற்கு பிறந்தநாள் கொண்டாடிய நபர்… வைரலாகும் வீடியோ!

ஹாரர் திரில்லர் ஜானரில் குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் இப்படத்தை பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் யோகிபாபுவும் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் வெளியான ‘டீன்ஸ்’ திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.