திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கோலாகலம்!

திண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி சாமி தரிசனம் செய்தனர். உலக பிரசித்தி பெற்ற திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பிப்.13-ம் தேதி கொடியேற்றத்துடன் …

திண்டுக்கல் ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி சாமி தரிசனம் செய்தனர்.
உலக பிரசித்தி பெற்ற திண்டுக்கல் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோயில்

மாசித் திருவிழா பிப்.13-ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது.  இந்த நிலையில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல்,  மதுரை,  திருச்சி,  திருநெல்வேலி,  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும்,  கையில் குழந்தைகளோடும்,  வாயில் அழகு குத்தியும் பூக்குழி இறங்கி  நேர்த்திக்கடன் செலுத்தினர்.  இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகத்தினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.