திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரின் சார்பில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அதிகாரிகள் கூறியதாவது, தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத போதைப் பொருட்கள் விறபனையை தடுக்க அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும் போதைபொருட்கள் நடமாட்டத்தினால் அதிக பாதிப்புக்குள்ளாவது வளரும் இளம் தலைமுறையினர்தான்.
இதனை தடுக்க காவல்துறையினருக்கு பொதுமக்கள் உதவ வேண்டும். மேலும் இது தொடர்பான தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 10581 க்கு தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.தகவல் தெரிவிப்பவரின் தனிபட்ட விவரங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடப்படாது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காவல்துறையினர் சார்பில் போதைப்பொருட்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
—வேந்தன்







