முக்கியச் செய்திகள் இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தல்-வேட்புமனுவைப் பெற்றார் திக்விஜய் சிங்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் மனு வாங்கியுள்ளார். நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே சசிதரூர் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் திக்விஜய் சிங் மனு வாங்கியுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நாளை (30ம் தேதி) நாளை மனு தாக்கல் செய்ய உள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் ஆதரவு பெற்ற திக்விஜய் சிங் போட்டியிட உள்ளதாக மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து 2019லிருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்.24 முதல் செப். 30-ம் தேதி வரை நடைபெறும் எனவும், வேட்புமனுவை அக்டோபர் 8ம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக். 17-ல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அக்.19-ல் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

1,098 நீதிபதிகளில் 83 பேர் மட்டுமே பெண் நீதிபதிகள் : மத்திய சட்டத்துறை அமைச்சர் .

Halley Karthik

இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம்: அமைச்சர் சேகர்பாபு

Halley Karthik

அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்த இளம்பெண்

EZHILARASAN D