அரசுப்பள்ளி மாணக்கர்கள் டிஜிட்டல் எஜிகேஷன் பெறும் வசதி மிகவும் சிரமமாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வகையில் புதிய திட்டத்துடன் இந்தியாவில் களமிறங்கியுள்ளது கூகுள் நிறுவனம்.
கூகுள் ஆண்டவரிடம் கேட்டால் கிடைக்காதது எதுவுமில்லை என்ற வார்த்தைகளுக்குமேலும் வலு சேர்க்கும் விதமாக , இந்தியாவில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது கூகுள். இன்றைய காலகட்டத்தில் ஏதாவது ஒரு தகவலை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், நம் அனைவரின் கைகளும் செல்லும் தளமாக கூகுள் உள்ளது. இந்த கூகுள் நிறுவனம் அமெரிக்காவைத் தாண்டி பெரிய அலுவலகம் அமைக்க இருப்பது ஹைதரபாத்தில் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இன்னமும் சில ஆண்டுகளில் இந்த புதிய அலுவலகம் பயன்பாட்டிற்கு வந்து விடும் என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மல்டிநேஷனல் டெக்னாலஜியின் தந்தையாக விளங்கும் கூகுளின் தலைமையகம், அமெரிக்காவின் மவுன்டைன் வியூ வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய கிளை ஹைதரபாத்தில் உள்ள கச்சிபவுலியில் அமையவுள்ளது. இதற்காக 7.3 ஏக்கர் நிலத்தை கடந்த 2019ஆம் ஆண்டு இந்நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. இதில் 3 ஆயிரத்து 300 மில்லியன் சதுர அடியில் கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் இங்கு பணியில் சேர்பவர்களின் எண்ணிக்கை தற்போது இருக்கும் எண்ணிக்கையை விட இரு மடங்காக உயரும் எனத் தெரிகிறது.
கடந்த 2004ஆம் ஆண்டு இந்தியாவின் கூகுள் நிறுவனம் தனது கிளைகளை தொடங்கியது. அந்த வரிசையில் பெங்களூரு, கூர்கான், மும்பை மற்றும் ஹைதரபாத் சிறிய அளவிலான அலுவலகங்கள் உள்ளன. தற்போது தயாராகும் ஹைதரபாத் அலுவலகம் மிகப்பெரியது என கூறப்படுகிறது. அதெல்லாம் சரிங்க. மேட்டருக்கு வாங்க என நீங்க நினைப்பது புரிகிறது. அது வேறுஒன்றும் இல்லைங்க, இங்கு டெக்னிக்கல் சப்போர்ட், கூகுள் விளம்பர பிரிவு, கூகுள் மேப், யூ டிபூப் சப்போர்ட் ஆகியவற்றோடு கூடுதலாக ஆராய்ச்சி பிரிவும் தொடங்கப்படவுள்ளது. இதனால் டெக்னாலஜியில் இன்னமும் ஒரு படி மேலே செல்ல நம்ம இளைஞர்களுக்கு உதவும் எனத்தெரிகிறது. அரசுப் பள்ளி மாணக்கர்களுக்கு எளிதாக டிஜிட்டல் எஜிகேஷன் கிடைப்பதற்கான ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்படும் எனத்தெரிகிறது. இதன்மூலம் நம் குழந்தைகள் அனைவருக்கும் டெக்னாலஜி எஜிகேஷன் கிடைக்கும்.








