ஐபிஎல் நேற்றைய ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
15-வது ஐ.பி.எல்-ன் 41வது போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் களம் கண்டன. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிபந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் குறைவான ரன்களை மட்டுமே எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள், தொடர் விக்கெட்களையும் பெற்றனர்.
20 ஓவர் முடிவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளுக்கு 146 ரன்களை குவித்தது. இதனால், 147 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி என்ற சூழ்நிலை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு அமைந்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் தொடக்கதிலே சரிவை சந்தித்தனர். நடப்பு தொடரில் சிறப்பாக விளையாடி வந்த பிரித்வி ஷா முதல் பந்திலே டக் அவுட்டாகி சாக் கொடுத்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களின் பந்து வீச்சை சற்று கடினமாகவே எதிர்கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் 19 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தனர். இதனால், 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








